இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் எனும் ஆசையில் உள்ள இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்திய ராணுவத்தின் தெற்கு மண்டல தலைமையகம், சென்னை அலுவலகத்திலிருந்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

வயது வரம்பு:
2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் 17 வயது 6 மாதம் நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். இதில், சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டும், சிப்பாய் பொது பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?
கோவையில் நடைபெறும் இந்த இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி, இந்த முகாமில், ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கோவை, நாமக்கல்,திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.

தேர்வு முறை:-
விண்ணப்பதாரர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இற்த முதற்கட்ட தேர்விற்குப் பிறகு ராணுவத்தில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர். அதில், வெற்றிகரமாகப் பயிற்சி காலம் முடித்த பிறகு, ராணுவத்தில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்பப்பதிவு மார்ச் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரையில் நடைபெறும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கூட நுழைவுகூட சீட்டு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/NOTFN_FOR_COIMBATORE_RALLY_MAY_2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.