கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!

Posted By: Kani

கொச்சியிலுள்ள கொச்சின் ஷிப் யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிராப்ட் மேன் ட்ரெயினி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடங்கள்:08

பணி: டிராப்ட் மேன் ட்ரெயினி(மெக்கானிக்கல்)
காலியிடம்: 01(எஸ்டி).

பணி: டிராப்ட் மேன் ட்ரெயினி(எலக்ட்ரிகல்)
காலியிடம்: 07 (பொது-5,எஸ்சி-1,எஸ்டி -1 ).

வயது வரம்பு: 26.3.2018 தேதிப்படி 25குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித் தொகை: முதல் வருடம்- ரூ.10,500. இரண்டாம் வருடம் ரூ.11,500. கூடுதல் பணி நேரத்திற்கு ரூ.4200(மாதம்). தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் இந்த இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief Manager (HR),
Cochin Shipyard Limited,
Perumanoor P.O.
KOCHI- 682105.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.3.2018.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி தேதி: 30.3.2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

'கேரியர்' கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு திருவனந்தபுரத்தில் வேலை!

English summary
Cochin Shipyard Ltd Recruitment For Ship Draftsman Trainees: Apply Before Mar 26!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia