அதிக சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை...!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு நிறுவனமாக அமைந்துள்ளது.

சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி ரயில்கள் அதற்கென உருவாக்கப்படுகின்றன. இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் ரயில் வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையை வழங்குகின்றன.

அதிக சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை...!

சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம், இந்தியாவின் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதி அளவில் திறக்கப்பட்டது. 2015-ல் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட 2 வண்ண வழித்தடங்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ, டெல்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் ஹைதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பாகும்.

ன்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் சென்னை மெற்றோ உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நிலத்தடி மற்றும் உயர்ந்த நிலையங்களின் கலவையாகும். மேலும் நிலையான பாதையினைப் பயன்படுத்துகிறது. சேவைகள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாறுபடும். சேவையானது 06:00 முதல் 22:00 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்குகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் 63,256 கோடி ரூபாய் செலவில் 119 கி. மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையைப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் நகரம் இந்தியாவில் வளர்ந்து வரும் இரண்டாம் நகரங்களில் முதன்மையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித்துறை என பல்தொழில்கள் இருப்பிடமாகவும், தொழில் முனைக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ள கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரின் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தூங்கா நகரமான மதுரை தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் திட்டம் 8,500 ரூபாய் மதிப்பில் மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இங்கு காலியாக உள்ள பொது மேலாளர், திட்ட மேலாளர், இணை திட்ட மேலாளர், துணை திட்ட மேலாளர் (General Manager, Project Manager, Joint Project Manager, Deputy Project Manager, Deputy Project Manager, Deputy Manager மற்றும் Fire Safety Officer / Consultant -Fire Safety) என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 28.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.டெபுட்டி புராஜக்ட் மேலாளர் (கன்ஸ்டிரக்சன்) -(Deputy Project Manager -Construction) பதவிக்கு 2 பணியிடங்கள், மற்ற பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B. E / B. Tech (EEE/Mech) degree/ B. Arch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு, General Manager, Project Manager, - ரூ.2,25,000/, Joint Project Manage - ரூ.1,45,000/, Deputy Project Manager & Fire Safety Officer - ரூ.1,25,000/, Deputy Manager - ரூ.75,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி(SC/ST )விண்ணப்பதாரர்கள் ரூ.50/ செலுத்த வேண்டும்.
மற்றவர்கள் - ரூ.300 செலுத்த வேண்டும்.

ரூ.3,40,000/- சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலை - மிஸ்பண்ணிடாதீங்க!
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் டிசம்பர் 28-ம் தேதிக்கு (28.12.2023) பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-13-2023-Final.pdf

என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு பெறலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Metro Rail Limited (CMRL) is looking for suitable and qualified applicants for the positions of General Manager (Maintenance), Project Manager, Joint Project Manager (Structures), Deputy Project Manager (Construction), (Architect), Deputy Manager (Transport Planning) and Fire Safety Officer / Consultant (Fire Safety)on contractual basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+