ரூ.2.25 லட்சத்தில் சென்னையில் பணி வாய்ப்பு...!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் (திட்டம் & வணிக மேம்பாடு), இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (வடிவமைப்பு) ஆகிய பதவிகளுக்கு, விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 24க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

நிர்வாகம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (Chennai Metro Rail Limited)

சென்னை மெட்ரோவில் பணி வாய்ப்பு...!

மேலாண்மை: மத்திய/மாநில அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.09.

2022பணி விவரங்கள்

• பொது மேலாளர் (திட்டம் & வணிக மேம்பாடு)

• இணை பொது மேலாளர்(வடிவமைப்பு)

• துணை பொது மேலாளர் (வடிவமைப்பு)

வயது வரம்பு

பொது மேலாளர் பதவிக்கும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, அதிகபட்ச வயது 55 ஆகவும், இணை பொது மேலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 43 ஆகவும், துணை பொது மேலாளர் பதவிக்கும் அதிகபட்ச வயது 40 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வயது தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

கல்வி தகுதி

பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், ஏதேனும் பட்டப்படிப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இணை பொது மேலாளர்/ துணை பொது மேலாளர் ஆகிய பதவிகளுக்கு, விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்ப கட்டணமாக ரூ.300 ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும். பட்டியலின பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டண சலுகை உள்ளிட்ட இன்ன பிற சலுகைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முறை

நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை வாயிலாக, காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஊதியம்

• பொது மேலாளர் - ரூ.2,25,000

• இணை பொது மேலாளர் - ரூ.1,25,000

• துணை பொது மேலாளர் - ரூ.90,000 என, மாத ஊதியமாக பெறுவர்.

சென்னை மெட்ரோவில் பணி வாய்ப்பு...!

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, அதில் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பதவிக்கு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சென்னை மெட்ரோவில் பணி வாய்ப்பு...!

விண்ணப்பிக்க கடைசி தேதி

விண்ணப்பங்கள் செப்டம்பர் 24க்குள் வந்து சேர வேண்டும். அதன் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

வயது தளர்வு, இன்ன பிற தகுதிகள் பற்றிய முழு விவரங்களை அறிய, கீழே சொடுக்கவும்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-10-2022-Website-Final.pdf

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://chennaimetrorail.org/job-notifications/

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited from eligible candidates for the vacancies in Chennai Metro Rail Corporation known as CMRL.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X