CISF constable, Driver Recruitment 2023:டிரைவிங் தெரியும்? சி.ஐ.எஸ்.எஃப்.,இல் ரூ.69 ஆயிரத்தில் வேலை...!

CISF இன்ஸ்பெக்டர், டிரைவர் பணி அறிவிப்பு 2023

பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சி.ஐ.எஸ்.எஃப்.,ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cisfrectt.in/ இல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 451 காலிப்பணியிடங்களுக்கு, ஆர்வம், தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)

மேலாண்மை : மத்திய அரசு

ரூ.69 ஆயிரம் ஊதியத்தில் சி.ஐ.எஸ்.எஃப்.,இல் டிரைவர் பணி..!

பணி விவரம்

v கான்ஸ்டபிள்/ஓட்டுநர் ( CONSTABLE/DRIVER AND CONSTABLE/DRIVER- CUM-PUMP OPERATOR (DRIVER FOR FIRE SERVICES)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 451

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2023

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் வாயிலாக, 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் (equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்

ஊதியம்

காவல் ஓட்டுநர் பணிக்கு நிலை-3 படி மாதம் ரூ.21,700 - ரூ.69,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

நோட் இட் ப்ளீஸ்....!

v இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.02.2023.. மறக்காதீங்க.... மறக்காதீங்க

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 21க்கு மேலும், 27க்கு கீழும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

Ø தேர்வு முறை இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. முதல் நிலையில் உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, தொழிற் திறன் தேர்வு மேற்கொள்ளப்படும் ( Physical Standard Test/Physical Efficiency Test, Documentation & Trade Test).

Ø இரண்டாம் நிலையில், கணினி வழி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்

Ø விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

Ø பணியின் தன்மை தற்காலிகமானது என்றபோதிலும், பணி திறன் அடிப்படையில் நிரந்தரம் செய்ய வாய்ப்புண்டு.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும்.

Ø விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் ஆகியோர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

எப்படி விண்ணப்பிப்பது?

www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது.

விரிவான தகவல்களுக்கு க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://cisfrectt.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cisfrectt.in/file_open.php?fnm=MVUY6kf9G0OCXN621j5b7eF_CNnrH0EIApk_jgtokSix4PHatyGRCgVqD5bC3DExiHoj

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CISF Driver Job Notification 2023: The Central Industrial Security Force known as CISF, which operates under the Union Ministry of Home Affairs, has issued a recruitment notification for Constable, Driver Posts from eligible Indian youth on Feb. Online applications are invited by 22nd. Hi youths don't forget....do you know how to drive? to you
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X