மாதம் ரூ.3.4 லட்சம் சம்பளத்தில் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் (சிஐஎல்) இயக்குநர் (தொழில்நுட்பம்)
Director (Technical) பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://pesbnew.nic.in/Home/AdvertisVacancy என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.
இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் நிலக்கரி நிறுவனங்கள் ஆரம்பத்தில் ஒரு தனியார் துறை நிறுவனமாக இருந்தது. செப்டம்பர் 1956 இல், இந்திய அரசாங்கம் அதன் சொந்த நிலக்கரி நிறுவனமான தேசிய நிலக்கரி மேம்பாட்டுக் கழகத்தை (NCDC) நிறுவியபோது இது மாற்றப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது.
மத்திய அரசாங்கத்தின் ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் விரைவான தொழில்மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில், நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இது அமைக்கப்பட்டது. அதே ஆண்டில், 1920 ஆம் ஆண்டு முதல் ஆந்திரப் பிரதேசத்தில் இயங்கி வந்த சிங்கரேணி காலியரி நிறுவனம், மத்திய அரசும் ஆந்திரப் பிரதேச மாநில அரசும் முறையே 45% மற்றும் 55% பங்குகளை வாங்கியபோது, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1971 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் 214 நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தனியார் துறையில் இயங்கும் 12 நிலக்கரி நிறுவனங்களை தேசியமயமாக்கியது.
இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில், எட்டு மகாநவரத்தின நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நிலக்கரி நிறுவனம் விளங்குகிறது.
இந்த பெருமைமிகு இந்தியா நிலக்கரி நிறுவனத்தில்தான் (CIL) தற்போது இயக்குநர்(தொழில்நுட்பம்) (Director -Technical) பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் மைன் இன்ஜினீயரிங் (Mine Engineering) பாடப்பிரிவில் பட்டப்படிப்புe தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு (Director-Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இந்த சிஐஎல்(CIL) நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை எப்படி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இயக்குநர் (தொழில்நுட்பம்)( Director -Technical) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://pesbnew.nic.in/Home/AdvertisVacancy என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.01.2024) தபாலில் அனுப்பித் தர வேண்டும்.
பணியிடம் தொடர்பான விளம்பரத்துக்கு
https://pesbnew.nic.in/Vacancy/OpenPDF/a1ab4a49-d298-ee11-93aa-001dd8b72d7f என்ற இணையதள முகவரியைக் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
https://pesbnew.nic.in/Home/AdvertisVacancy என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications












