சென்னையில் செயல்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயணடையலாம்.

சென்னை போதைப் பொருள் மற்றும் மனநிலையை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் ஜெராக்ஸ் இயக்குதல் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழக அரசின் கீழ் பணியமர்த்தப்பட உள்ளதால் இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
பணி : ஜெராக்ஸ் இயக்குதல்
காலிப் பணியிடம் : 2
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜெராக்ஸ் மிசின் இய்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,600 முதுல் ரூ.52,400 வரை
பணி : துப்புரவாளர் மற்றும் மசால்ஜி
காலிப் பணியிடம்:-
துப்புரவாளர் : 3
மசால்ஜி : 2
தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : 15,700 முதல் ரூ. 50000 வரை
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(எஸ்.டி, எஸ்சி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)
தேர்வு செய்யப்படு முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.09.2018
விண்ணப்பிக்கும் முறை : நீதிமன்ற நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://districts.ecourts.gov.in/india/tn/chennai/recruit என்ற இணையதள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பிறகு தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
முதன்மை சிறப்பு நீதிபதி, போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை - 104
இப்பணியிடம் குறித்தான மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/PC-NDPS%20NOTIFICATION1OF2018.pdf என்னும் இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












