8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!

புழல் மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!

 

பணியிடம் : புழல் மத்திய சிறைச்சாலை, சென்னை

பணி :

  • சமையலர் - 01
  • ஆற்றுப்படுத்துநர் - 01

கல்வித் தகுதி :

சமையலர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். சமையல் பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

Sociology/Psychology/Social Work போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

(அதிகப்பட்சமாக) எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 32, ஓ.சி-30 இருத்தல் வேண்டும்.

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 28.01.2021ஆம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை- 66 தொலைபேசி எண்.044-26590615 26590615 26590615 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://chennai.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
chennai puzhal jail Recruitment: Application invited for Counsellor and Cook post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X