சென்னை துறைமுகத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை...!!

சென்னை துறைமுகத்தில் எக்சிகியூட்டிவ் இன்ஜினீயர்களுக்கு (Executive Engineer) பல்வேறு பணியிடங்கள் காத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://chennaiport.gov.in/api/static/default/career/EE(E).pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

சென்னைத் துறைமுகம் (Chennai Port) இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. அண்மைக் காலங்களில் முக்கியமான கண்டெய்னர் கையாளும் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று ஆகும்.

ற்போது, சிங்கப்பூர், ஹாங்காங், ஷாங்காய், சென்சென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது பெரிய அளவில் விரிவாக்கப்பட உள்ளது. தற்போது உலகின் 86 வது பெரிய கண்டெய்னர் கையாளும் துறைமுகமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 140 மில்லியன் டன்களாக இதன்திறனை விரிவுபடுத்த திட்டங்கள் உள்ளன.

சென்னை துறைமுகத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை...!!

தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சென்னைத் துறைமுகம், நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு செயற்கைத் துறைமுகம் ஆகும். இது கோரமண்டல் கரை எனப்படும் கிழக்குக் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள், 1861 ஆம் ஆண்டில் கட்டப்பட்டவை ஆகும். ஆனால் 1868-ம் ஆண்டிலும், 1872-ம் ஆண்டிலும் ஏற்பட்ட சூறாவளியால் இது பயன்படுத்தப்பட முடியாத நிலைக்கு மாறியது. 1876-ஆம் ஆண்டில் "ட" வடிவத் தடைச் சுவருக்கான கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன.

ஆனால் 1881-ம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி, பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இருந்த துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. இத் துறைமுகம் புதிதாக அமைக்கத்தொடங்கிய 1881 ஆம் ஆண்டையே தொடக்கமாகக் கொண்டு 2007 ஆம் ஆண்டில் சென்னைத் துறை முகத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.

சென்னைத் துறைமுகம் அமைந்துள்ள பகுதி இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு கடற்கரைச் சமவெளிகள் என்று அழைக்கப்படும் ஒரு தட்டையான கடலோர சமவெளியாகும். சென்னை துறைமுகம் வங்காள விரிகுடா அமைந்துள்ள நிலையில் இது கோரமண்டல் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. துறைமுகம் வெப்ப பூமத்திய ரேகையில் அமைந்துள்ளது. மேலும் இது கரையோரமாகவும் உள்ளது. இது பருவகால வெப்பநிலையில் தீவிர மாறுபாட்டை தடுக்கிறது.

இந்த பெருமைமிகு சென்னை துறைமுக நிறுவனத்தில்தான் தற்போது எக்சிகியூட்டிவ் இன்ஜினீயர் (Executive Engineer) பணியிடங்கள் 16 காலியாக உள்ளன.

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் படிப்பில் (Engineering Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,750/- முதல் ரூ.16,750/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 22.01.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு

https://chennaiport.gov.in/api/static/default/career/EE(E).pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Education Qualification for this post is BE/B.Tech. Totally 16 vacancies are available for this job. Candidates need to apply offline via Posts for these posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+