சென்னை ஊர்க்காவல் படையில் இளைஞர்கள் இணைந்து பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினஅறன. தகுதியும், ஆர்வ மும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி எண் - 9498135190 -ஐ தொடர்புகொள்ளலாம்.
இந்தச் சிறப்புவாய்ந்த சென்னை ஊர்க்காவல் படையில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி:
இப்பணியில் இணைவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள், எந்த வித குற்ற பின்னணியும் இல்லாத நன்னடத்தை உடையவர்கள், 18 முதல் 50 வயதில் உட்பட்ட நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி:
விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி பெற வேண்டும். பயிற்சி முடிந்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவார்கள்.
சம்பளம்:
இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு சீருடை, தொப்பி, காலனி போன்றவை வழங்கப்படும். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூபாய் 560 சிறப்பு படியாக வழங்கப்படும். ஆனால் பெண்களுக்கு பகல் ரோந்து பணிகள் மட்டுமே வழங்கப்படும்.
பதக்கம்
சிறப்பாக பணிபுரியும் நபர்களுக்கு தமிழக முதல்வரின் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் ஜனவரி 22-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
சென்னை பெருநகர ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
சைதாப்பேட்டை,
சென்னை -15.
தொலைபேசி எண் - 9498135190


Click it and Unblock the Notifications












