எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனையில், இரண்டு வார்டு மேலாளர் பணியிடங்களுக்கு மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம்: எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனை
மேலாண்மை: மாநில அரசு
பணி விவரம்: வார்டு மேலாளர் (Ward Manager)

பணியிடம்
சென்னை
கல்வித் தகுதி
வார்டு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது இது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன.
தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
இயக்குநர் மற்றும் பேராசிரியர்,
மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும்
அரசு தாய் சேய் மருத்துவமனை,
எழும்பூர்,சென்னை- 600 008.
விண்ணப்பிக்க கடைசி நாள் : மே 26
மே 26ஆம் தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 2
ஊதியம்
வார்டு மேலாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு, மாதம் ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications












