கிராம உதவியாளர் பணி நியமனம்: சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, 5 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : சென்னை மாவட்ட வருவாய் அலகு
மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 12
பணி விவரம்
கிராம உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கல்வி தகுதி
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுத, படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
குறைந்தபட்சம் ரூ.11,100 முதல் அதிகபட்சம் ரூ.35,100 வரை மாத ஊதியம் (Special Time Scales of pay Matrix Level 6) என்ற அடிப்படையில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் வாயிலாக நியமனம் செய்யப்படும்.
வயது வரம்பு
30.09.2022 அன்று குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகும்.தெரிவு முறை/ நிபந்தனைகள்:
வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். பின்னர், எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்.
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பதாரர் சென்னை மாவட்ட வருவாய் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் அவசியம்
தமிழக அரசின் https://www.tn.gov.in, வருவாய் நிர்வாக துறை இணையதளம் https://cra.tn.gov.in, சென்னை மாவட்ட இணையதளம் https://chennai.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications












