சென்னையில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரப்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் சென்னை 600 008
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/india/tn/chennai/recruit என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












