மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை தயார்..!

மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.chennai.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில்

றியுள்ளதாவது:

மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் சார்பில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் சேவைகளை வழங்கும் நோக்கில் ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையத்தில்(181) தொகுப்பூதிய, ஒப்பந்த அடிப்படையில் காலியாகவுள்ள 3 வழக்கு பணியாளர்கள், 1 பாதுகாப்பாளர், 2 பன்முக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுடைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை தயார்..!

இதில், காலியாகவுள்ள 3 வழக்கு பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் ஒரு வருடம் பணியாற்றிய முன் அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள்பட்ட பெண்களாகவும், உள்ளூரைச் சேர்ந்தவராகவும், வாகனம் ஓட்டத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.

மேலும், இதேபோல், பாதுகாப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய முன் அனுபவம் பெற்ற, உள்ளூரைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும். மேலும், 2 பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த முன்அனுபவம் உடையவராகவும், சமையல் தெரிந்த, உள்ளூரைச் சார்ந்த பெண்களாகவும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.6,400 வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு சேர விரும்பும் நபர்கள் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் மார்ச்13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai district Collector Rashmi Siddharth Zagade has invited applications for various posts. For More details please login into www.chennai.nic.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+