சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://chennai.nic.in/ta/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்
மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மாணவிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டம் (Chennai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சென்னை ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில்தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், மக்கள்தொகை அதிகம் உள்ள மாவட்டம் ஆகும்.
178 ச.கி.மீ. பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018-ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஆலந்தூர் வட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், மதுரவாயல் வட்டம், மாதவரம் வட்டம், அம்பத்தூர் வட்டம் மற்றும் திருவொற்றியூர் வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 ச.கி.மீ. ஆகக் கூடியுள்ளது.

இந்த பெருமைமிகு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகளுக்குத்தான் தற்போது கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில்
றியுள்ளதாவது:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும்10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
ஆண்டு வருமானம்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
ஆதார் எண்
இதில் பயன்பெற, 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் மாணவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தன் பெயரில் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களை தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள்
தலைமை ஆசிரியர்கள் மாணவியரின் விவரங்களை எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பா்மேஷன் சிஸ்டம் (இஎம்ஐஎஸ்) எனப்படும் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர்களை அணுக வேண்டும்.
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இணையதள முகவரி:தொடர்புக்கு...
கூடுதல் விவரங்களுக்கு https://chennai.nic.in/ta/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்


Click it and Unblock the Notifications












