சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டேட்டா என்ட்ரி, கணினி இயக்குபவர், சுகாதாரப் பணியாளர் என மொத்தம் 58-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மாநகராட்சி
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 58
பணிகள்:-
- ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்
- கணினி இயக்குபவர்,
- சுகாதாரப் பார்வையாளர்,
- கணக்காய்வாளர்
கல்வித் தகுதி : பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.45,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்களைச் செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : திட்ட அலுவலர் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (RNTCP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600012
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.chennaicorporation.gov.in/ அல்லது
http://www.chennaicorporation.gov.in/images/RNTCP_Tamil_NewspaperAd.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கில் காணலாம்.


Click it and Unblock the Notifications












