சென்னை கண்டோன்மெண்ட் போர்டில் பணி!

Posted By: Kani

சென்னை பல்லாவரத்திலுள்ள செயின்ட் தாமஸ் மவுன்ட் கன்டோன்மெண்ட் போர்டில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ஜூனியர் இன்ஜினியர் (சிவில்)
காலியிடம்: 01
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பி.ஈ./ பி.டெக்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பதவி: லோயர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: ஏதேனும் இளநிலைப் பட்டத்துடன் ஆங்கில டைப்ரைட்டிங்கில் லோயர் முடித்திருக்க வேண்டும்.

பதவி: ஸ்கில்டு அஸிஸ்டெண்ட் கிரேடு ( எலக்ட்ரீஷியன்)
காலியிடம்: 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். மத்திய/ மாநில அரசுத் துறைகளில் ஓராண்டு முன் அனுபவம். 

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200-க்கு ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Chief Executive Officer, Cantonment Board, St. Thomas Mount என்ற பெயரில் சென்னையில் செலுத்தத்தக்க வரைவோலை (டி.டி) எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  இந்த இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் வரைவோலையையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Chief Executive Officer,
Cantonment Board, North Parade Road,
St. Thomas Mount, Chennai - 600 016.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02-04-2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'நோட்டீஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

English summary
Chennai Cantonment Board invites Application for the post of Junior Engineer post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia