அங்கன்வாடி மையத்தில் பணிபுரிய விருப்பமா? சென்னையில் 478 சத்துணவு அமைப்பாளர் வேலை

Written By: kaniselvam.p

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் வாயிலாக இயங்கும் அங்கன்வாடி மையங்களில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 20-03-2018 -க்குள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சத்துணவு அமைப்பாளர்

காலியிடங்கள்: 205

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்கள் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பணி: சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர்

காலியிடங்கள்: 273

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், அங்கன்வாடி மையத்திலிருந்து 3 கி.மீ தூரத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20-03-2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இந்த  லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு இந்த  லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு லிங்க்

இதன் மூலம் பணி விவரம் தெரிந்து கொள்ளலாம்.

3. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் பணியிடம் போன்ற முழுமையான விவரங்களும், விண்ணப்பமும் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்

கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து வித நகல்களும் இணைத்து விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவும்.

English summary
Chennai Anganwadi Recruitment 2018 – Apply Offline 478 Cooking Assistant, Organiser Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia