மத்திய மின்துறை அமைச்சகத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் அருமையான பணிவாய்ப்பு.

மத்திய மின்துறை அமைசக்கத்தில் (Ministry of Power) மத்திய மின் ஒழுங்குமுறை ஆணையம் (சிஇஆர்சி) உறுப்பினர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC), நாட்டில் உள்ள மின்துறையின் முக்கிய ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இது மின்சாரச் சட்டம் 2003-ன் பிரிவு - 76 இன் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம்(CERC) 1998-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் சட்டம், 1998 மின்சார கட்டணங்களை பகுத்தறிவு, மானியங்கள் தொடர்பான வெளிப்படையான கொள்கைகள், திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் மின்சார கட்டண ஒழுங்குமுறையுடன் இணைக்கப்பட்ட விஷயங்களுக்காக இது உருவாக்கப்பட்டது.

மத்திய மின்துறை அமைச்சகத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் அருமையான பணிவாய்ப்பு.

மேலும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முதன்மையாக இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்டது, மேலும் மின் உற்பத்தி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஆற்றல் பரிமாற்றத்திற்கான கூட்டுத் திட்டத்தைக் கொண்ட பிற உற்பத்தி நிறுவனங்களின் கட்டணங்களை சீர்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்யவும் இது உருவாக்கப்பட்டது.

https://cercind.gov.in/index.html என்ற இணையதள முகவரியில் இதன் செயல்பாடுகளை நாம் அறியமுடியும்.

தற்போது இந்த பெருமைமிகு மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மின் ஒழுங்குமுறை ஆணைய (Central Electricity Regulatory Commission (CERC-Member) உறுப்பினர் பிரிவில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

இந்த மத்திய மின் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் சட்டப் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், ஜுடிசியல் ஆபீஸராக (Judicial Officer) பணியாற்றிய அனுபவமும் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
இந்த மின் துறை அமைச்சம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.4,00,000/- மாத சம்பளமாக பெறுவர்.

மத்திய மின் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின் துறை அமைச்சகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 25.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://cercind.gov.in/vacancy.html என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு போதிய தகவல்களை அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Central Electricity Regulatory Commission (CERC), Ministry of Power (MoP), Government of India has invited Applications from the Officers Eligible for the Member Post in the Central Electricity Regulatory Commission (CERC).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+