பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை தயாராக உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இங்கு'அப்ரென்டிஸ்' பிரிவில் 3000 காலி இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 142 இடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு centralbankofindia.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின்ல் தான் தற்போது அப்ரென்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கான வயது விரவம்: 1.4.1996 - 31.3.2024க்குள் பிறந்திருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
பணிக்காலம்: ஓராண்டு அப்ரென்டிஸ் பணியில் வேலை செய்யலாம்.

இதற்கு ஸ்டைபண்டாக மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் ஆட்கள் அப்ரென்டிஸ் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்
தேர்வு தேதி: இதற்கான தேர்வு 10.3.2024-ம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இதற்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணமாக ரூ. 800 செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 400 செலுத்தினால் போதுமானது.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் (6.3.2024) அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: மேலும் விவரங்களுக்கு centralbankofindia.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












