சிமெண்ட் கார்ப்பரேஷனில் ஆலோசகர் பணியிடம் காலி...!!

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( Cement Corporation of India) நிறுவனத்தில் தற்போது ஆலோசகர் (Consultant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்லது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.cciltd.in/UserFiles/files/Advt_ 14 DM (E) & Khalasi(1).pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (சிசிஐ) என்ற நிறுவனம் மத்திய அரசின் ஒரே சிமெண்ட் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனமாக அமைந்துள்ளது. நாட்டில் சிமென்ட் உற்பத்தியில் தன்னிறைவு அடைய உதவும் வகையில் பொதுத்துறையில் சிமென்ட் தொழிற்சாலைகளை அமைக்கும் நோக்கத்துடன், 1965 ஆம் ஆண்டு ஜனவரி 18 -ம் தேதி முழுவதுமாக அரசுக்கு சொந்தமான நிறுவனமாக நிறுவனம் இணைக்கப்பட்டது.

சிமெண்ட் கார்ப்பரேஷனில் ஆலோசகர் பணியிடம் காலி...!!

சிசிஐ நிறுவனத்தின் தலைமைச் செயலகம் புது டெல்லியில் உள்ளது. போர்ட்லேண்ட் போஸோலானா சிமெண்ட் (PPC), போர்ட்லேண்ட் ஸ்லாக் சிமெண்ட் (PSC), சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் (OPC) போன்ற பல்வேறு வகையான சிமெண்ட்களை கார்ப்பரேஷன் உற்பத்தி செய்கிறது. இந்திய ரயில்வேக்கு தேவையான சிமெண்ட் கலவைகளையும் இது உற்பத்தி செய்து தருகிறது.

சிசிஐ (CCI) தற்போது மூன்று லாபம் ஈட்டும் இயக்க தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பிராந்திய மையங்கள் பல்வேறு இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைத்துள்ளது
இந்த தொழிற்சாலைகள் நாடு முழுவதும் கிழக்கிலிருந்து (அஸ்ஸாமில் போகாஜன்) மேற்கு (அகல்தாரா, சத்தீஸ்கரில் மந்தர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நாயகன்) மற்றும் வடக்கிலிருந்து (இமாச்சலப் பிரதேசத்தில் ராஜ்பான் மற்றும் ஹரியானாவில் சர்க்கி தாத்ரி) தெற்கு (கர்நாடகாவில் குர்குந்தா மற்றும் அடிலாபாத்) வரை பரவியுள்ளன. தெலங்கானாவில் தந்தூரிலும் டெல்லியில் ஒரு சிமென்ட் அரவை தொழிற்சாலையும் உள்ளது.

இந்த பெருமைமிகு சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (சிசிஐ) நிறுவனத்தில்தான் தற்போது ஆலோசகர் பணியிடங்கள் 2 காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 5ம் வகுப்பு / 10ம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.28,000/- மாத ஊதியம் தரப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.12.2023-ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு

https://www.cciltd.in/UserFiles/files/Advt_ 14 DM (E) & Khalasi(1).pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CCI Recruitment 2023: Cement Corporation of India (CCIL) Limited has released notification for Consultant posts on its official website. Interested and eligible candidates can apply offline for these posts on or before December 20, 2023. for more details please logon into https://www.cciltd.in/UserFiles/files/Advt_%2014%20DM%20(E)%20&%20Khalasi(1).pdf
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+