இன்ஜினியர்களுக்கு அழைப்பு... மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் பணி

Posted By: Kani

மத்திய அரசின் கட்டுமானத்துறை நிறுவனமான சர்ட்டிஃபிகேஷன் எஞ்சினியர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்: 139

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: சீனியர் கண்ஸ்டரக்ஸன் இன்ஜினியர் - 54
பணி: டெபுடி கண்ஸ்டரக்ஸன் மேனேஜர் - 21
பணி: கண்ஸ்டரக்ஸன் மேனேஜர் - 04
பணி: சீனியர் சேப்டி ஆபிஸர் - 22
பணி: டெபுடி சேப்டி மேனேஜர் - 08
பணி: சீனியர் வேர்ஹவுஸ் -10
பணி: டெபுடி வேர்ஹவுஸ் - 05
பணி: டெபுடி ப்ளானிங் -15

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 35 முதல் 45க்குள், ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான இமெயில் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்து பணிக்கான தலைப்பை சப்ஜெக்ட் பகுதியில் குறிப்பிட்டு வரும் 22 ஆம் தேதிக்குள் இமெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேற் குறிப்பிட்ட முறையில் விண்ணப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி அறிய கிளிக் இந்த லிங்கை கிளிக் செய்க.

 

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்

2.கேரியர்:

இடது கை பக்கம் உள்ள கேரியர் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

4.விண்ணப்பப் படிவம்:

மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 22 ஆம் தேதிக்குள் இமெயிலில் அனுப்பி வைக்க வேண்டும்.

5.இமெயில் முகவரி இணைப்பு:

மேலும் துறை வாரியான காலி பணியிட விவரம், விண்ணப்பிக்கும் இமெயில் முகவரி போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சிபிஐயில் பணிபுரிய விருப்பமா? 25 ஆய்வாளர் பணியிடங்கள் காலி!

English summary
CEI invites applications from Experienced Engineers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia