காரைக்குடியில் உள்ள சிக்ரி என்று அழைக்கப்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) ஜேஆர்எஃப், சீனியர் புராஜக்ட் அசோசியேட் (JRF, Senior Project Associate ) போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு வரும் 8.1.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.cecri.res.in/Default.aspx என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
சிக்ரி என்று அழைக்கப்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்று ஆகும். இது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும்.
இது 1948, ஜூலை 25-ல் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி நகரில் நிறுவப்பட்டு, 1953 ஜனவரி 14 அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாய்வு மையம் அமையவதற்கு டாக்டர். அழகப்பச் செட்டியார் அவர்கள் 300 ஏக்கர் நிலத்தையும், 15 லட்ச ரூபாய் பணத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இம்மையம் கடந்த 50 வருடங்களில் மின் வேதியியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் மட்டுமல்லாமல் தென் கிழக்கு ஆசியாவிலும் முதன்மையான ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. மொத்தமாக 755 காப்புரிமைகள் இவ்வாராய்ச்சி மையத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிராந்திய மையங்களாக, மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி மையமும், சென்னை பிரிவு, சென்னை தரமணி, துரு ஆராய்ச்சி மையம், மண்டபம் முகாம், ராமநாதபுரம், தூத்துக்குடி மையம், தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

இந்த பெருமைவாய்ந்த சிக்ரி என்று அழைக்கப்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்தான் (CECRI) தற்போது ஜேஆர்எஃப், சீனியர் புராஜக்ட் அசோசியேட் (JRF, Senior Project Associate ) போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.
இங்கு சீனியர் புராஜக்ட் அசோசியேட் பிரிவில் (Senior Project Associate) 2 பணியிடங்களும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பிரிவில் (Junior Research Fellow) 1 பணியிடமும், புராஜக்ட் அசோசியேட் பிரிவில் (Project Associate-I) 4 பணியிடங்களும் காலியாக உள்ளன.
சிக்ரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
சிக்ரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள பணியிடங்களுக்கான (CECRI -காரைக்குடி) அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் எம்.இ, எம்.டெக், பிஎச்.டி (ME/ M.Tech, Ph.D )முடித்திருக்க வேண்டும்.
சிக்ரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள பணியிடங்களுக்கான வயது வரம்பு:
காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 முதல் 45 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
சிக்ரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள பணியிடங்களுக்கான சம்பள விவரம்
சீனியர் புராஜக்ட் அசோசியேட் பணிக்கு ரூ .42,000/-ம், ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பிரிவுக்கு ரூ 37,000/-ம், புராஜக்ட் அசோசியேட் பணிக்கு (Project Associate-I) ரூ 25,000 to ரூ ..31,000/-ம் சம்பளம் வழங்கப்படும்.
சிக்ரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித் தகதி, வயது, சாதி (SC/ST/OBC/EWS விண்ணப்பதாரர்கள்), அனுபவம் (ஏதேனும் இருந்தால்), சமீபத்திய பாஸ்போர்ட்டின் அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் நகல்களுடன் வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம். நேர்காணல் ஆனது ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://www.cecri.res.in/Default.aspx என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
விளம்பரம் தொடர்பான அறிவிப்பை https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-13-2023_AdvtCopy.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்வதன் மூலம் அறியலாம்.


Click it and Unblock the Notifications












