இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு

Posted By:

யுபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II உடன் எஸ்எஸ்சி பெண்களுக்கான பணிவாய்ப்பு இந்தியா இராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பு பெற மத்திய ஆட்சிப் பணி ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
மத்திய ஆட்சிப்பணி ஆணையம் இந்திய இராணுவத்திற்காக தேர்வினை வருடத்தில் இரண்டு முறை நடத்துகிறது . ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒருமுறையும் அடுத்து இரண்டாம் முறையாக சிடிஸ் II தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும் .

மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்தில் பணியாற்ற சிடிஎஸ் போட்டி தேர்வு

யுபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ்II இரண்டாவது முறை அறிவிப்பானது யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது . இந்திய இராணுவத்தில் பணிபுரிய கனவு கொண்டவர்கள் விண்ணப்பிக்க இந்த தேர்வு ஒரு நல்ல வாய்ப்பாகும் . இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .

கம்பைண்டு டிஃபென்ஸ் சர்வீஸ் எக்ஸாம் II தேர்வு எழுத விண்ணப்பிக்க யூபிஎஸ்சியின் இணையத்தளத்தின் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் . சிடிஎஸ் தேர்வானது எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கு ஒருவாரத்திற்கு முன்பு www.upsc.gov.in இணையதளம் மூலம் அட்மிட்கார்டு பெற்றுகொள்ளலாம் .

டேராடூனில் உள்ள இந்திய மிலிட்டரி அகாடமியில் பணியாற்ற 100 பேரும் ,இந்திய நேவல் அகாடமியில் பணியாற்ற 45 பேரும் ,ஏர் ஃபோர்ஸில் பணியாற்ற 32 பேரும் ஒடிஏவில் 225 பேர் ஒடிஏ பெண்கள் எஸ்எஸ்சியின் கீழ் 12 பேரும் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது .

சிடிஎஸ் 2ல் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 வங்கி மூலமாக செலுத்தலாம் . பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்தலில் விலக்களிப்பட்டுள்ளது . சிடிஎஸ் தேர்வு எழுதுவோர்க்கு நெகடிவ் மதிபெண் உண்டு . நவம்பர் 19 ஆம் நாள் தேர்வு நடைபெறும் . சிடிஎஸ் தேர்வு நேரம் ஆங்கிலம் 2மணி நேரம் , 100 மதிபெண், பொது அறிவு இரண்டு மணி நேரம் 100 மதிபெண் 2 மணி நேரம், எலிமெண்ட்ரி கணிதம் 100 மதிபெண் 2 மணி நேரம் ஆகும் .மேலும் சிடிஎஸ் தேர்வு எழுத பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் . கணிதம் அறிவியல் படித்திருக்க வேண்டும் . 23 வயதுவரை தேர்வு எழுதலாம் .

சார்ந்த பதிவிகள் :

வெலிங்கடனில் கிளாரிக்கல் போஸ்ட் வேலைவாய்ப்பு அப்ளை பண்ணுங்க 

சிப்பிங் காரப்ரேஷனில் வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் 

மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள்!! 

English summary
here article tell about upsc notification to join Indian army

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia