மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்புவோர் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடிஇடி) வெற்றி பெற வேண்டும். 2019-ஆம் ஆண்டுக்கான இந்த தகுதித் தேர்வு வரும் ஜூலை 7ம் தேதியன்று நடைபெறவுள்ளது. சிபிஎஸ்இ நடத்தும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தேர்வுத் தாள் :
- 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு தாள் ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு தாள் இரண்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ.700, இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ.1200 கட்டணமும் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.350, இரண்டு தாள்களும் எழுத விரும்புவர்கள் ரூ.600 கட்டணமும் செலுத்தவேண்டும்.
தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி
விண்ணப்பிக்கும் முறை : www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 07.07.2019
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.03.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 08.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ctet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












