சிபிஐயில் பணிபுரிய விருப்பமா? 25 ஆய்வாளர் பணியிடங்கள் காலி!

Posted By: Kani

மத்திய புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள காவல் ஆய்வாளர் (டெபுடேஷன்) பணியிடங்களுக்கு புலனாய்வுப் பிரிவில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: காவல் ஆய்வாளர் (டெபுடேஷன்)

காலியிடங்கள்: 25

கல்வித் தகுதி: ஏதேனும் இளநிலைப் பட்டம்.

வயது: 56 வயதுக்குள்

பணி அனுபவம்: பொதுத்துறை நிறுவனங்களில் (வங்கிகளில்) புலனாய்வுப் பிரிவில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 23-03-2018.

விண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதள அறிவிப்பில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப முகவரி: The Deputy Director (Pers.),
Central Bureau of Investigation,
Head Office, Administration Division,
Plot No.5-B, 7th Floor, CGO Complex Lodhi Road,
New Delhi-110003

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம் 

2. ஜாப் ஆஃபர்:

வலது கை பக்கம் உள்ள ஜாப் ஆஃபர் இன் சிபிஐ என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

4.அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

5.விண்ணப்பப் படிவம்:

மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 23 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அப்ளை பண்ணியாச்சா... ஆதார் நிறுவனத்தில் தனி செயலர் பணி!

English summary
CBI inviting applications for the positions of Inspector Of Police

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia