நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் ராணுவக் குடியிருப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : வெலிங்டன் இராணுவ குடியிருப்பு
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 09
பணி மற்றும் பணியிட விபரம்:-
- சபாய் வாலா (துப்புரவாளர்) : 06
- மஸ்தூர் : 01
- உதவி செவிலியர் (ஆண்) : 01
- இரண்டாம் தர ஆசிரியர் : 01
ஊதியம் :-
- சபாய் வாலா (துப்புரவாளர்) : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
- மஸ்தூர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
- உதவி செவிலியர் (ஆண்) : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
- இரண்டாம் தர ஆசிரியர் : ரூ.20,600 -முதல் ரூ. 65,500 வரையில்
கல்வித் தகுதி:-
- சபாய் வாலா (துப்புரவாளர்) : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மஸ்தூர் : வயர்மேன், ஃபிட்டர், கார்பண்டர், பிளம்பர், எலக்ட்ரிஷியன், மேசன் கோர்ஸ் போன்ற பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
- உதவி செவிலியர் (ஆண்) : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- இரண்டாம் தர ஆசிரியர் : 12-ம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அல்லது பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு : 08.02.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.cbwellington.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.cbwellington.in/pdf/Appointment2019DetADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












