தொடர்மழை எதிரொலி பள்ளிகளுக்கு விடுமுறை, தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

Posted By:

கனமழை காரணமாக சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு மட்டும் 30 செமீ மழை பதிவாகியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த சிரமாக இருக்குமென்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு

தேசியதிறனாய்வு தேர்வு தள்ளி வைப்பு :

தேசிய திறனாய்வு தேர்வானது மத்திய அரசினால் நடத்தப்பட்டு வருகின்றது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் . ஆனால் கனத்த மழை காரணமாக மாணவர்க்ளுக்கு இன்று நவம்பர் 4இல் நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர் 18 ஆம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

முதல் கட்டமாக மாநில அளவில் வெற்றி பெற வேண்டும் அதன்பின் தேசிய அளவில் அனைத்து மாநில தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கிணையான தேர்வில் வெற்றி பெற வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் தங்கள் ஆய்வை தேர்வு நேரத்திற்குள் எழுது முடித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னையில் ஆவடி, சிட்லபாக்கம் சுற்றுவட்டாரத்திம் பெய்யும் மழையின் அளவும் அதிகமாக இருக்கின்றது .

அறையாண்டு தேர்வுகள் நெருங்கும் வேளையில் மாணவர்களுக்கு விரைந்து பாடங்கள் முடிக்கமுடியாமல் மழையால் தடைப்படுகிறது. மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்தால் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளது.

சார்ந்த பதிவுகள்:

நாளை மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஹால்டிக்கெட் தயார் 

பத்து கடலோர மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !!

English summary
here article tell about schools leaves declared duo to heavy rain

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia