எம்சிஏ படிக்க ஆசையா... சிறந்த கல்லூரிகள் பட்டியல் இதோ...

நமது நாட்டில் எம்சிஏ எனப்படும் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (எம்சிஏ) பட்டமேற்படிப்பு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தொடர்பான முதுகலைப் படிப்பாக அமைந்துள்ளது. 3 ஆண்டுகள் படிக்கும் படிப்பாகும் இது.

எம்சிஏ படிப்பு என்பது கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. ஏராளமான மாணவர்கள் இந்தப் படிப்புகளைப் படிக்க அதிக விருப்பமாக உள்ளனர். ஆனால் அவர்கள் எம்சிஏ படிக்க கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எம்சிஏ பட்டம் பெற்ற மாணவர்கள், வேகமாகவும் திறமையாகவும் பயன்பாடுகளை (அப்ளிகேஷன்) வடிவமைக்க உதவும் தொழில்நுட்பங்களுடன் பணிபுரிய விருப்பமாக உள்ளனர்.

அதன் நோக்கம் மாணவர்களுக்கு தற்போதைய, தொழில்துறை தொடர்பான கணினி அறிவியல் கல்வியை வழங்குவதாகும். நாடு முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்புகளை வழங்குகின்றன, இது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பல தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்குகிறது.

எம்சிஏ படிக்க ஆசையா... சிறந்த கல்லூரிகள் பட்டியல் இதோ...
ஏஐசிடிஇ(AICTE) பல்கலைக்கழக மானியக்குழுவால்(UGC) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது நிறுவனத்தில் MCA பட்டம் தொடரும் போது, அது மதிப்புமிக்க சொத்தாக மாறும் நிலை உள்ளது.

இந்தப் பட்ட மேற்படிப்பானது நாட்டில் உள்ள பல்வேறு சிறந்த எம்சிஏ கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டங்கள் சிறப்பு வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சமீபத்திய பதிப்பு மற்றும் போக்குகளுக்கு ஏற்ப கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்திட்டங்களை உருவாக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எம்சிஏ பாடத்திட்டமானது சிஸ்டம் டிசைனிங், டேட்டா செயலாக்கம், வெப் டிசைனிங், வெப் தீர்வு, டேட்டா மைனிங், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட், அப்ளிகேஷன் டெவலப்மென்ட், கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள், ஈஆர்பி போன்ற பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. மிகச் சிறந்த கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்து இந்தப் படிப்பை பயிலும்போது அவர்கள் எதிர்காலத்தில் நல்ல வேலையில் சேர்வதற்கு உத்தரவாதம் வழங்குகிறது.

நாட்டில் எம்சிஏ படிப்புகளை வழங்கும் முதல் 10 இடங்களில் உள்ள கல்லூரிகளின் விவரங்களைப் பார்ப்போம்...

1. கம்ப்யூட்டர் அறிவியல் துறை-சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம், புனே:

சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில்1980-ல் தொடங்கப்பட்ட கம்ப்யூட்டர் அறிவியல் துறை சிறந்த படிப்புகளை வழங்கி வருகிறது. இங்கு எம்சிஏ படிப்பு மிகச் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை (PUCSD) தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கணினி அறிவியலில் தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

2. ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் அன்ட் சிஸ்டம்ஸ் சயின்ஸஸ்-ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1974-ல் தொடங்கப்பட்ட இந்த ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் அன்ட் சிஸ்டம்ஸ் சயின்ஸஸ் கல்லூரி, தரமான எம்சிஏ படிப்புகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் அங்கமான இந்த கல்லூரி, பல்கலைக்கழகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

எம்சிஏ படிக்க ஆசையா... சிறந்த கல்லூரிகள் பட்டியல் இதோ...

3. ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் அன்ட் இன்பர்மேஷன் சயின்ஸஸ், ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத்.

1983-ல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் அன்ட் இன்பர்மேஷன் சயின்ஸஸ் கல்லூரி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாகும்.
எம்சிஏ படிப்புகளை வழங்கும் முதன்மையான உயர்கல்வி பள்ளிகளில் ஒன்றாக இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. இது பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்பர்மேஷன் சயின்ஸஸ் கல்லூரியின் கீழ் அமைந்துள்ளது.

4. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி), திருச்சி: திருச்சி என்ஐடி என்று பரவலாக அழைக்கப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நாட்டில்

உள்ள மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இது முன்பு திருச்சி ரீஜனல் இன்ஜினீயரிங் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. என்ஐடி-யில் எம்சிஏ படிப்பு மிகச் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. 1964 முதல் இயங்கி வரும் என்ஐடி உயர்கல்வி வழங்குவதில் மிகச் சிறந்த இன்ஸ்டிடியூட்டாக மக்களிடையே பெயர் பெற்றுள்ளது.

5. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ரா ராஞ்சி:

1955-ல் அமைக்கப்பட்ட பிர்லா இன்ஸ்டிடியூட், ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலுள்ள மெஸ்ரா பகுதியில் அமைந்துள்ளது. இது பிஐடி மெஸ்ரா என்றும் அழைக்கின்றனர். மறைந்த கொடையாளரும், தொழிலதிபருமான பி.எம்.பிர்லாவால் இந்த பிஐடி மெஸ்ரா தோற்றுவிக்கப்பட்டது. எம்சிஏ படிப்புகளை மிகச் சிறந்த முறையில் வழங்கி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

எம்சிஏ படிக்க ஆசையா... சிறந்த கல்லூரிகள் பட்டியல் இதோ...

6. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கர்நாடகா, சூரத்கல், மங்களூரு:

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அமைந்துள்ளது. 1960-ல் உருவாக்கப்பட்ட இந்த கல்லூரி, அப்போது கர்நாடகா ரீஜனல் இன்ஜினீயரிங் கல்லூரி (கேஆர்இசி) என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்று மாற்றப்பட்டது. எம்சிஏ படிப்புகளை மிகச் சிறந்த முறையில் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது இந்த என்ஐடி சூரத்கல்.

7. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ரூர்கேலா

ரூர்கேலா நகரில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உயர்கல்வி நிறுவனம் என்ஐடி ரூர்கேலா என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது என்ஐடிஆர் என்றும் என்ஐடி-ஆர் என்றும் மாணவர்களால் அழைக்கப்படுகிறது. இது முன்பு ரீஜனல் இன்ஜினீயரிங் கல்லூரி, ரூர்கேலா என்று அழைக்கப்பட்டு வந்தது. எம்சிஏ படிப்புகளை அளிக்கும் முக்கிய இன்ஸ்டிடியூட்களில் ஒன்றாக என்ஐடி ரூர்கேலா அமைந்துள்ளது.

8.மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அலகாபாத்

1961-ல் மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அமைக்கப்பட்டது. இது முன்பு மோதிலால் நேரு ரீஜனல் இன்ஜினீயரிங் கல்லூரி, அலகாபாத் (எம்ஆர்இசி) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இதுபெயர் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. எம்சிஏ படிப்புகளுக்காக மாணவ, மாணவிகளை சிறந்த முறையில் தயார் செய்கிறது இந்த இன்ஸ்டிடியூட்.

9. பெங்களூரு கிறைஸ்ட் பல்கலைக்கழகம்

1969-ல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிறைஸ்ட் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் அது நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறியது. இந்த பல்கலைக்கழகத்தை சர்ச் ஆஃப் சவுத் இந்தியா (சிஎஸ்டி) அமைப்பின் கார்மேலைட்ஸ் ஆஃப் மேரி இம்மாக்குலேட் (சிஎம்ஐ) பிரிவு நிர்வகித்து வருகிறது. எம்சிஏ படிப்புகளை சிறந்த முறையில் வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இது தனித்து நிற்கிறது.

10. கோயம்புத்தூர் பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி

1926-ல் உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியை, பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் சாரிட்டீஸ் டிரஸ்ட் நிர்வகித்து வருகிறது. கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. எம்சிஏ படிப்புகலை அற்புதமான முறையில், மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவித்து அவர்கள் வாழ்வில் உயர வழிவகுக்கிறது இந்த இன்ஸ்டிடியூட்.

எம்சிஏ படிப்பை முடித்த பிறகு உயர்கல்வியைத் தொடர்வது ஒரு தனிநபரின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். பலர் பல்வேறு காரணங்களுக்காக எம்சிஏ படிப்பில் சேர்கின்றனர். ஆனால் சிலர் தொழில்முறை அல்லது பிற காரணங்களுக்காக தங்கள் கல்வியை மேலும் தொடர வேண்டிய அவசியத்தை உணரலாம். அதிக கல்வித் தகுதிகள், தொழிலில் தொடங்கும் போது உகந்த ஊதிய அளவை அவர்களுக்கு இந்த படிப்பு உறுதி செய்கிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
If you are planning to pursue career in Computer Science the here goes the top MCA Colleges in India. Masters in Computer Applications helps you to get the job in IT companies. Packages are also good.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+