சென்னையில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (C-DAC) என்னும் மத்திய அரசின் கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Centre for Development of Advanced Computing சார்பில் வெளியிடப்பட்டுள்ள ப்ராஜெக்ட் இன்ஜினியர் பணிகளுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 பிப்ரவரி 2020 அன்றைய தேதியின்படி, 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
இப்பணியிடத்திற்கு பிரிவு வாரியாக கல்வித்தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி..இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : நேர்காணலின் அடிப்படையில் இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஊதியம் : மாதம் ரூ.31,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cdac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். நேரடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.