பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

Posted By:

வேலை பிஎஸ்என்எல்னின் வேலை வாய்ப்பு அறிவிப்பு போட்டி தேர்வுக்கு படிக்கும் உங்களுக்கான புதிய அரசு வேலை அறிவிப்பு நன்றாக படியுங்கள் தேர்வு எழுதுவோர் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி பிஎஸ்என்எல்லில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் அக்கவுண்டண்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பிஎஸ்என்எல் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . பாரத சஞ்சார் நிகாம் லிமெடெட் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தம் 996 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன . பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர் நேரடி ஜூனியர் அக்கவுண்டண்ட் ஆகும் .

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு மாதம் ரூபாய் 16, 400 முதல் ரூபாய் 40 ,400 வரை பெறலாம். இப்பணியிடங்களில் பணியாற்ற எம்காம் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ/ சிஎஸ் சார்ந்த படிப்புகளை அங்கிகரிக்கப்பட்ட பல்கலைநிறுவனத்தில் படித்திருக்க வேண்டும் .

பிஎஸ்என்எல நிறுவனத்தில் வேலைபெற இன்று 11.9.2017 முதல் 15.10 2107 வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகாரபூர்வதளத்தில் விண்ணப்பிக்கலாம் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பிக்க http://externalbsnlexam.com/drjaoaug17/index.php அணுகவும் . விண்ணப்ப கட்டணமாக பொதுபிரிவு மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் ரூபாய் 1000மும் எஸ்டி , எஸ்சி பிரிவினருக்கு ரூபாய் 500 தொகை செலுத்தப்பட வேண்டும் . விண்ணப்பத்தாரர்க்கு 1.1.2017 முதல் 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .

பிஎஸ்என்எல் பணியிடங்களில் விண்ணப்பிக்க பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு 3 வருடமும் , எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும் மாற்றுதிறனாளிகளுகு 10 வருடமும் வயதுவரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர் ஆன்லைன் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

சார்ந்த பதிவுகள்:

 இந்திய மின்துறையில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 

வங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு!! 

இந்திய மருத்துவத்தில் புள்ளியலாளர் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க

English summary
here article tell about BSNL job notification
Please Wait while comments are loading...