மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள காண்ஸ்டபில் பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 269 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 269
பணி : Constable
மொத்த காலிப் பணியிடங்கள் : 269
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
மெட்ரிகுலேஷன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு விளையாட்டுத் துறையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.21,700 முதல் அதிகபட்சம் ரூ.69,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2021 தேதிக்குள் https://rectt.bsf.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : உடற் தகுதித் திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://bsf.gov.in/Home அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












