பாங்க் ஆஃப் பரோடாவில் சீனியர் ஆபீஸர், ஆபீஸர் (Senior Officer/ Officer) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு
https://bobfinancial.turbohire.co/job/publicjobs/noHwINK8kUWLy8JYECIz80Mhcmh3ocuep0h5YzHDJtFVW0WXXPxJIp1n0WHh6q6C என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகளும் உள்ளன.

1908 ஆம் ஆண்டில், மராட்டிய அரசர் மூன்றாம் சிவாஜிராவ் கெய்க்வாட் பேங்க் ஆஃப் பரோடாவை குஜராத்தில் உள்ள பரோடாவில் நிறுவினார். இரண்டாண்டுகட்குப் பின் அகமதாபாத்தில் முதல் கிளை உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், கம்பாலா, நைரோபி, தாருஸ்ஸலாம் ஆகிய அயலகக் கிளைகள் உருவாகின.
1957-ஆம் ஆண்டு லண்டனில் இந்த வங்கியின் சார்பில் வங்கிக் கிளை உருவாகி முக்கிய மைல்கல்லாக சாதனை படைத்தது.பாங்க் ஆஃப் பரோடாவின் துணை சேவை நிறுவனமாக பிஓபி ஃபைனான்சியல் பிரிவில் உள்ளது.
இந்த பெருமைமிகு பாங்க் ஆஃப் பரோடாவின் துணை சேவை நிறுவனமான பிஓபி ஃபைனான்ஸ் நிறுவனத்தில்தான் தற்போது சீனியர் ஆபீஸர், ஆபீஸர் (Senior Officer/ Officer) பணியிடங்கள் காலியாக உள்ளன.
சீனியர் ஆபீஸர், ஆபீஸர் பணியிடத்துக்கான கல்வி தகுதி
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சீனியர் ஆபீஸர், ஆபீஸர் பணியிடத்துக்கான முன் அனுபவம்:
1 முதல் 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
சீனியர் ஆபீஸர், ஆபீஸர் பணியிடத்துக்கான வயது வரம்பு
இந்தப் பணியிடத்துக்கான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
சீனியர் ஆபீஸர், ஆபீஸர் பணியிடத்துக்கான ஊதிய விவரம்
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு BOB Financial-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது ஸ்கில் டெஸ்ட் என்ற திறனறித் தேர்வு (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
https://bobfinancial.turbohire.co/job/publicjobs/noHwINK8kUWLy8JYECIz80Mhcmh3ocuep0h5YzHDJtFVW0WXXPxJIp1n0WHh6q6C என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












