பாரதியார் பல்கலை.யில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடம்....!!

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) பணியிடங்கள் காலியாக உளளதாக அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/11/Advertisement-and-Application-1-2.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு பெற முடியும்.

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University) தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982-ல் உருவானது. கோயம்புத்தூரின் மையத்தில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.

பாரதியார் பல்கலை.யில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடம்....!!

இப் பல்கலைக் கழகத்தின் கீழ், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள, 133 அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார்க் கல்லூரிகள் செயல்படுகின்றன.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 துறைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 54 பட்ட மேற்படிப்புகளும் முனைவர் பட்ட ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்ட விரிவாக்க மையம் 2013-ஆம் ஆண்டு முதல் ஈரோடு பகுதியில் தனியாகச் செயல்பட்டு வருகிறது. இங்குப் பல முதுநிலைப் பட்ட மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும் பிற சேவைகளும் வழங்கப்படுகின்றன.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 133 உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன, அதில் 13 அரசுக் கல்லூரிகள், 1 வான்படை நிர்வாகக் கல்லூரி, 3 இணைக் கல்லூரிகள், 1 பல்கலைக்கழகம், 16 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 99 சுயநிதி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் 2020-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்படி இந்திய அளவில் 21-ஆவது இடத்தை பெற்றுள்ளது.

முதுகலை , முதுனிலை மாணவர்களுக்கும், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மற்றும் முதுமுனைவர் ஆய்வாளர்களுக்கும் தேவையான நூல்களைக் கொண்ட சிறந்த நூலக வசதியும் உள்ளது. இங்கு பன்னாட்டு மாணவர்களும் கற்கும் வண்ணம் வாசிப்பு அறை உள்ளது. நூலகம் கணினிமயப்படுத்தப்பட்டுள்ளதால் பயனர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களின் இருப்புநிலையை அறிந்துகொள்ள (கணினி மென்பொருள் வழி) முடிகிறது. இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளோர் நூல்களைத் தக்க ( அனுமதியுடன்) எடுத்துச் செல்ல முடியும்.

இந்த பெருமைமிகு பாரதியார் பல்கலைக்கழகத்தின் டான்ஸ்சே-ஆர்ஜிபி திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரியத்தான் தற்போது விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தற்போது இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்துக்கான கல்வி தகுதி

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சமூக அறிவியல் துறையில் பிஎச்.டி./எம்.ஃபில்/முதுகலை பட்டதாரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்துக்கான (Research Assistant) சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்துக்கான தேர்வு செயல் முறை:
இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்துக்கான விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுருக்கமான பயோ-டேட்டாவை உரிய சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் 15.12.2023 க்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு

https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/11/Advertisement-and-Application-1-2.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு பெற முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University invites applications for the post of Research Assistant. Interested candidates can Apply Offline on or before 15-Dec-2023. For more details please logon into https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/11/Advertisement-and-Application-1-2.pdf.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+