BEL Recruitment 2020: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (BEL) காஜியாபாத் கிளையில் காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (BEL) காஜியாபாத் கிளையில் காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பொறியியல், டிப்ளமோ துறை பயின்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

BEL Recruitment 2020: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த தொழில்நுட்ப உதவியாளர்

மொத்த காலிப்பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி முன் அனுபவம் : இந்திய முப்படைகளில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 30,000 முதல் ரூ.1,20,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும்.

தேர்வு முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போரில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

DGM(HR) ,Bharat Electronics Limited Ghaziabad , P.O. Bharat Nagar, Sahibabad, Ghaziabad(U.P.)-201010,

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-detail-Web-31-12-2019.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharat Electronics Limited (BEL): Application invite for of Ex-Servicemen at post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+