மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெமல் என்று அழைக்கப்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பிஇஎம்எல்) காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.bemlindia.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பாரத் எர்த்மூவர்ஸ் நிறுவனம் மண்வாரி இயந்திரங்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றை தயாரித்து அளிக்கிறது. ராணுவத்துக்குத் தேவையான பல தளவாடங்களை உற்பத்தி செய்து வருகிறது இந்த பொதுத் துறை நிறுவனம். மெட்ரோ ரயில்களுக்கு பெட்டிகளையும் தயாரித்துத் தருகிறது இந்த நிறுவனம். பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயலில் பெரிய தொழிற்சாலைகளை அமைத்துள்ளது இந்த நிறுவனம்.
பிஇஎம்எல் நிறுவனமானது பெமல் நிறுவனம் என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறது. நாட்டில் மிகப்பெரிய மண்வாரி இயந்திரங்களை தயாரித்து பெருமை சேர்த்து வருகிறது இந்நிறுவனம். அதுமட்டுமல்லாமல் மத்திய பாதுகாப்புத்துறை க்குத் தேவையான ஏராளமான வாகனங்கள், ரயில் பெட்டிகளையும் தயாரித்து வருகிறது.

ரயில்வே, போக்குவரத்து, சுரங்கம் போன்ற பல்வேறு கனரக வாகனங்கள், உபகரணங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
மேலும் கொல்கத்தா மெட்ரோ ரயில் பணிகளுக்கான பெட்டிகளையும் பிஇஎம்எல் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிஇஎம்எல் நிறுவனம் ஆசியாவின் இரண்டாவது பெரிய மண்வாரி இயந்திரங்களை கருவி, வாகனங்களை களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
அதன் பங்குகள் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையில் "BEML" என்ற குறியீட்டின் கீழும், மும்பை பங்குச் சந்தையில் 500048 என்ற குறியீட்டின் கீழும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இதன் மிகப்பெரிய தொழிற்சாலை அமைந்துள்ளது. மேலும் மைசூரு நகரிலும் பெரிய தொழிற்சாலையை அமைத்து ஏராளமான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
அண்மையில் பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத் தொழிற்சாலையில் ஓட்டுநர் இல்லா நவீன ரக மெட்ரோ ரயில்களை தயாரித்து அறிமுகம் செய்யப்பட்டது.
மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்காக தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை, பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் வளாகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து பேசினார். நாட்டின் பெருமைமிகு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பிஇஎம்எல் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன ரக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களைத் தயாரித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்றும் அவர் பாராட்டினார்.
இந்த சிறப்புவாய்ந்த பெமல் நிறுவனத்தில் தற்போது துணை பொது மேலாளர் (எச்.ஆர்) 1, உதவி மேலாளர் 1, அட்மின் ஆபீசர் 30 என மொத்தம் 32 பணி இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி
அட்மின் ஆபீஸர் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு(டிகிரி) முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி : 27.12.2023 அடிப்படையில் எச்.ஆர்., 45 வயது, உதவி மேலாளர் 30 வயது, அட்மின் ஆபீஸ்ர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: Manager (HR), Recruitment Cell, BEML Soudha, No 23/1, 4th Main, S R Nagar, Bangalore - 560027.
விண்ணப்பக்கட்டணம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
கடைசி நாள்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 27.12.2023-ம் தேதி கடைசி நாளாகும்,
மேலும் விண்ணப்பங்கள் சென்று சேர 3.1.2024 கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு bemlindia.in என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












