இன்ஜினியர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை!

Posted By: Kani

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெபுடி இன்ஜினியர்

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.40,000  

வயதுவரம்பு: 31.03.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Sr Dy General Manager (HR),

Bharat Electronics Limited,

I.E.Nacharam, Hyderabad - 500076

அஞ்சல் வழியாக விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பெட்ரோலியம் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி!

English summary
BEL invite Application for deputy engineer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia