நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், மத்திய அரசின் பிஇசிஐஎல் எனும் பொதுத்துறை நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில், ஆறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளில் தேர்வாகும் நபர்களுக்கு, குறைந்தபட்சம் மாதம் ரூ.28,600 முதல் ரூ.52,300 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்( Broadcast Engineering consultant india limited)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
Ø Technical Assistant
Ø Speech Therapist
Ø OT Technician
Ø Manager/Supervisor /Gas officer
Ø DEO
Ø Lab Technician
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 23
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2023
கல்வி தகுதி/ ஊதியம்
டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு, 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்சி பிரிவில், ஓடி டெக்னீக்கல் படிப்பு அல்லது 5 ஆண்டு அனுபவம் பெற்றிருத்தல் அவசியம் அல்லது டிப்ளேமா ஓடி டெக்னிக் அல்லது 8 ஆண்டு பணி அனுபவத்தை கொண்டிருத்தல் அவசியம்.
விண்ணப்பம் செய்வோர் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,600 வழங்கப்படும்.
ஸ்பீச் தெரபிஸ்ட்
ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு பி.எஸ்.டி., டிகிரியை ஸ்பீச் மற்றும் ஹியரிங் படிப்பை முடித்து, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபருக்கும் மாதம் ரூ.50,600 சம்பளமாக வழங்கப்படும் என, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓடி டெக்னீசியன்
பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.எஸ்.சி., பிரிவில் ஓடி டெக்னீக்கல் படிப்பு அல்லது 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
டிப்ளேமா ஓடி டெக்னிக் அல்லது 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,600 வழங்கப்படும்.
மேனேஜர்/சூப்பர்வைசர்/கியாஸ் ஆபிசர்
இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் அல்லது டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து 7 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் 30 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.52,300 வழங்கப்படும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டிஇஓ)
டிஇஓ(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10, பிளஸ் 2 படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
18 வயது முதல் 27 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக ரூ.28,600 வழங்கப்படும்.
லேப் டெக்னீசியன்
பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்தாரர்கள் டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.30,100 வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.becil.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் t[email protected], [email protected] ஆகிய இ-மெயில் முகவரி அல்லது 0120 - 4177860 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












