பொதுத்துறை வங்கியில் ஒன்றான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 45 அதிகாரி காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடம் குறித்த முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகம் : மகாராஷ்டிரா வங்கி
மொத்த காலிப் பணியிடங்கள் : 45
பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-
பணி : சட்ட அலுவலர் - 25
வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : பாதுகாப்பு அதிகாரிகள் - 12
பணி : தீயணைப்பு அதிகாரி - 01
வயது வரம்பு : 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : மேலாளர் (செலவு) - 01
பணி : பொருளாதார நிபுனர் - 01
பணி : தகவல் அமைப்பு தணிக்கையாளர்கள் - 05
வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்க கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.708, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofmaharastra.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 19.08.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bankofmaharashtra.in/downdocs/WEBSITE%20RECRUITMENT%20OF%20SPECIALIST%20OFFICERS111.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












