தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பல்வேறு இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் தகவல்களைப் பெற bankofindia.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (பேங்க் ஆஃப் இந்தியா, Bank of India, BoI) மகாராஷ்டிர மாநிலம் மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கியாகும். 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வங்கியாக செயலாற்றி வருகிறது. இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 5,084 கிளைகள் உள்ளன. மிகக் குறைந்த செலவில் நிதிச் செயல்பாடுகளையும் தொலைதொடர்பு வசதிகளையும் வழங்கும் உலகளவு வங்கியிடை நிதி தொலைதொடர்பு சமூகம் (SWIFT) நிறுவியவர்களில் இந்த வங்கியும் ஒன்று. கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.
இந்த சிறப்பு வாய்ந்த பேங்க் ஆப் இந்தியா வங்கியில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

தற்போது இங்கு சிறப்பு அதிகாரி பதவியில் கிரடிட் ஆபிசர் 25, சட்ட அதிகாரி 56, தலைமை மேனேஜர் 9, சீனியர் மேனேஜர் 35, டேட்டா சயின்டிஸ்ட் 2, டேட்டாபேஸ் அட்மின் 2, டேட்டா குவாலிட்டி 2, டேட்டா கவர்னன்ஸ் 2, ஆரக்கிள் அட்மின் 2 பணியிடங்கள் உட்பட மொத்தம் 143 பணியிடங்கள் காலியாக அமைந்து உள்ளன.
பேங்க் ஆப் இந்தியா பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய கிரடிட் ஆபிசர் பணிக்கு ஏம்.பி.ஏ., , சட்ட அதிகாரி பணிக்கு பி.எல்., மற்ற பணிகளுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
பேங்க் ஆப் இந்தியா பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: ஒவ்வொரு பணியிடத்துக்கும் வயதுத் தகுதி பிரிவு வாரியாக மாறுபடும். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தைக் காணலாம்.
தேர்ச்சி முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: பேங்க் ஆப் இந்தியா பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 175 செலுத்தினால் போதுமானது.
கடைசிநாள்: வரும் 10.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் தகவல்களைப் பெற bankofindia.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












