பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாங்க் ஆஃப் பரோடா வங்கி
மொத்த காலிப் பணியிடங்கள் : 35
பணிகள் :-
மேலாளர் ஐடி (யூனிக்ஸ் நிர்வாகி), மேலாளர் ஐடி (விண்டோஸ் நிர்வாகி), மேலாளர் ஐடி (எஸ்.கியூ.எல்) நிர்வாகி, மேலாளர் ஐ.டி (ஆரக்கிள் நிர்வாகி), மேலாளர் ஐ.டி (நெட்வொர்க் நிர்வாகம்), மூத்த மேலாளர் ஐ.டி (மென்பொருள் டெவலப்பர்) உள்ளிட்ட பல்வேறு மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு : குறைந்தபட்சமாக 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 31,705 முதல் ரூ.51,490 வரையில்
கல்வித் தகுதி : காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 02.08.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf என்னும் இணையதள இணைப்பில் சென்று காணவும்.


Click it and Unblock the Notifications












