பேங்க் ஆப் பரோடா 2018 வேலை வாய்ப்பு திட்டத்தின்படி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான தகுதி, வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்டவறை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம் : பேங்க் ஆப் பரோடா
துறை : மத்திய அரசு வேலை
காலிப் பணியிடம் : 20
பணி : ஐடி வல்லுநர் மற்றும் இதர பிரிவுகளில்
பணியிடம் : இந்தியாவில் பல்வேறு பகுதிகளில்
தேர்வு முறை : தகுதி அடிப்படையில், நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.bankofbaroda.co.in
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 27.09.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.10.2018
வயது வரம்பு :-
தலைமை நிர்வாக அதிகாரி : 40 முதல் 50 வரை
தொழில்நுட்ப வல்லுநர், நிர்வாக இயக்குநர், தர நிர்ணய அதிகாரி, வணிக ஆய்வாளர், உட்கட்டமைப்பு அதிகாரி : 30 முதல் 40 வரை
வணிக வல்லுநர், தர நிர்ணய பொறியாளர், புள்ளிவிபர கட்டமைப்பாளர், மொபைல் செயலி மேம்பாட்டாளர் : 25 முதல் 35
விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவினர் ரூ.600, எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ள https://www.bankofbaroda.com/index.htm லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.bankofbaroda.com/career-detail.htm#tab-5 எனும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












