10-வது தேர்ச்சியா? அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு- தமிழக அரசு

அரியலூரியில் செயல்பட்டு வரும் 77 அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரியலூரியில் செயல்பட்டு வரும் 77 அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு- தமிழக அரசு

பணியிடம் : அரியலூர்

மேலாண்மை : தமிழக அரசு

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணியின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசால் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. முதன்மை அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 35 காலிப் பணியிடங்களும், குறு அங்கன்வாடி மையப்பணியாளர் பணிக்கு 4 காலிப் பணியிடங்களும், அங்கன்வாடி மைய உதவியாளர் பணிக்கு 38 காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

தகுதிகள்:

முதன்மை அங்கன்வாடி மையப் பணியாளர்:-

அங்கன்வாடி மையப் பணியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2018 டிசம்பர் 31 அன்று 25 வயது நிறைவு பெற்று 35 வயதிற்கு உட்பட்டவர் விண்ணப்பிக்கலாம். கைம்பெண் மற்றும் ஆதரவற்ற கைம்பெண் 25 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 25 முதல் 38 வயது வரை வயதுவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறு அங்கன்வாடி மைய பணியாளர் :-

குறு அங்கன்வாடி மையப் பணியாளர் பணிக்கு 2018 டிசம்பர் 31ம் தேதியின்படி 25 வயது நிறைவு பெற்று 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற கைம்பெண் 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்:-

உங்கன்வாடிஉதவியாளர் பணிக்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். 13.12.2018 அன்று 20 வயது முடிவுற்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதான 40 வயதில் இருந்து 5 வருடம் கணவரை இழந்தவர்கள், ஆதரவற்ற கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் காலிப் பணியிடம் சார்ந்த அதேப் பகுதியைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை :-

இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். லும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 பிப்ரவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ariyalur Anganwadi Recruitment 2019 77 Anganwadi Worker Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+