உத்தரகண்ட்டின் நைனிடால் நகரின் அருகே மனோரா சிகரத்தில் அமைந்துள்ளது ஆரியபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்ஸ் (ARIES) ஆய்வு மையம்.

இம்மையத்தில் வானவியல், வான் இயற்பியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது அம்மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ஐ.இ.எஸ் வேலை வாய்ப்பு 2020
ஆரியபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்ஸ் (ARIES) ஆய்வு மையத்திர் (ARIES) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிர்வாகி, நிதி ஆலோசகர், அறிவியல் உதவியாளர், இளநிலை பொறியியல் உதவியாளர், விஞ்ஞானி - பி என பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ARIES பணியிட விபரங்கள்
ஆரியபட்டா ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 7 காலிப் பணியிடங்கள் உள்ளது. நிர்வாகி - 01, நிதி ஆலோசகர் - 01, அறிவியல் உதவியாளர் - 02, இளநிலை பொறியியல் உதவியாளர் - 03, விஞ்ஞானி - பி - 01 ஆகியவை ஆகும். இப்பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் முதல் பிஎஸ்சி, எம்.எஸ்சி முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகி
நிர்வாகி பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, கணக்கு அதிகாரி, நிதி அதிகாரி உள்ளிட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.40,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நிதி ஆலோசகர் 2020
ஆரியபட்டா ஆராய்ச்சி மையத்தில் உள்ள நிதி ஆலோசகர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் SAS துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மத்திய அரசுத் துறையில் கணக்கு அதிகாரி, நிதி அதிகாரி. துணைச் செயலாளர், உள்ளிட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.40,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் உதவியாளர்
அறிவியல் உதவியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயற்பியல் மற்றும் கணிதவியலில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வகத்தில் பணியாற்றிய அனுபவம் அவசியம். ARIES அறிவியல் உதவியாளர் பணிக்கு 27 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளநிலை பொறியியல் உதவியாளர்
ARIES இளநிலை பொறியியல் உதவியாளர் பதவியில் மொத்தம் 3 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 27 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞானி - பி
விஞ்ஞானி - பி பதவியில் மொத்தம் 1 காலிப் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. எம்.எஸ்சி இயற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு ரூ.56.100 முதல் ரூ.1,77,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு முறை
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மத்திய, மாநில அரசிப் பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ARIES Recruitment விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aries.res.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 15.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.aries.res.in/recruitments/vacancy-15-05-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












