தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், காலியாக உள்ள மாவட்ட வளப்பயிற்றுநர், (District Resource Person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB & CB)தற்காலிக பணியிடத்துக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருநெல்வேலி மாவட்டம்.
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
மாவட்ட வளப்பயிற்றுநர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.04.2023
கல்வி தகுதி
Sociology, Social work, Social Work Management ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்று, ஆறு ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன், சுய உதவிக் குழுக்கள் திட்டத்தின் கீழ், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு பணிகளில் குறைந்தது எட்டு ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்
இப்பணிக்கு https://tirunelveli.nic.in என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும். இதர முறையில் பெறப்படும் விண்ணப்பமும் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
வயது வரம்பு, சலுகைகள், இன்னபிற கூடுதல் விவரங்களுக்கு https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற அறிவிப்பை பார்வையிடவும்.


Click it and Unblock the Notifications












