தேசிய அனல்மின் நிறுவனத்தின் (என்டிபிசி) கீழ் செயல்படும் தேசிய சுரங்க நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து பயன் அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு careers.ntpc.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தேசிய அனல் மின் நிறுவனம், இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது 34,894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசி, 75,000 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் தீட்டியுள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக என்டிபிசி உள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த தேசிய சுரங்க நிறுவனத்தில் தான் தற்போது மைனிங் ஓவர்மேன் 52, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் 21, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 13, டிரையினிங் இன்ஸ்ட்ரக்டர் 3, ஜூனியர் மைன் சர்வேயர் 11, மைனிங் சிர்தார் 7 உட்பட 114 பணி இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:
31.12.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு முறையில் இந்தப் பணியிடங்களுக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும்
பெண்கள். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 31-ம் தேதியாகும்( 31.12.2023).
கூடுதல் விவரங்களுக்கு: careers.ntpc.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












