பெண்கள் சேவை மையத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மைய நிா்வாகி, ஆலோசகா், வழக்கு அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மைய நிா்வாகி, ஆலோசகா், வழக்கு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் சேவை மையத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என இயங்கிவரும் சகி என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மைய நிா்வாகி, ஆலோசகா், வழக்கு அலுவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மைய நிா்வாகி பணிக்கு, சமூகப் பணியில் முதுநிலை பட்டம் பெற்ற உளவியல் ஆலோசனை அல்லது வளா்ச்சி மேலாண்மையில் பெண்கள் பிரச்சனைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது பிற திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 4 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மைய நிர்வாகி பணிக்கு உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உள்ளூரைச் சாா்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தங்குமிடம் வழங்கப்படும். இந்தப் பணிக்கு மாத ஊதியம் ரூ.30, 000 -என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர் பணி

ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகப் பணியில் முதுநிலைப் பட்டம் பெற்று, உளவியல் ஆலோசகா் அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது பிற திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 2 வருட முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஓர் ஆண்டு முக் அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். ஆலோசகர் பணிக்கு மாதம் ரூ.20,000 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு அலுவலா்கள்

வழக்கு அலுவலா்கள் பணியிடத்திற்கு சமூகப் பணியில் இளநிலை பட்டம் பெற்ற உளவியல் ஆலோசகா் அல்லது மேலாண்மை வளா்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது பிற திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிா்வாகத்தில் ஓர் அண்ட முன்அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மேலும் உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இப்பணியிடங்கள் அனைத்திற்கும் உள்ளூரைச் சாா்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும்.

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் உரிய சான்றிதழ்களுடன் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 8-ஆவது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்து பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited to work at the Integrated Service Center
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+