UPSC Free Coaching for women 2022:கேர்ள்ஸ் ரெடி?... சென்னை, மதுரையில் இலவச பயிற்சி...!

UPSC Free coaching for women 2022

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, கல்லூரி கல்வி இயக்ககம் மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை, மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகளுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவிகள் விண்ணப்பித்து, பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., பெண் தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு...!

பயிற்சி வகுப்புகள்

சென்னையில் உள்ள இராணி மேரி கல்லூரி, மதுரையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில், இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

நோட் இட் ப்ளீஸ்...!

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 14.11.2022 முதல் 24.11.2022 வரை.

எழுத்துத் தேர்வு

01-12-2022 முற்பகல் 10.30 முதல் 12.30 மணி வரை...

எழுத்துத் தேர்வு முடிவுகள்: 05-12-2022

வயது வரம்பு

14.11.2022 அன்று விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மேலும், 32 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதி உடையவராவர்.

பயிற்சி காலம்: 6 மாதம்

தெரிவு முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இராணி மேரி கல்லூரி, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வரும் 24ஆம் தேதிக்குள் கோரப்பட்ட ஆவணங்களுக்கு பிழையின்றி பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், தேசிய வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ. 200 வரைவோலை ( demand Draft) உடன் கல்லூரி நிர்வாக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப தபால் அட்டையில், CIVIL SERVICES EXAMINATIONS COACHING APPLICATION FOR ENTERANCE EXAMINATION" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வரைவோலையின் பின்புறம் விண்ணப்பதாரின் பெயர், முகவரி எழுதியிருக்க வேண்டும்.

ராணிமேரி கல்லூரி அல்லது மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிகளில், ஏதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள் நடைபெறும்.

இலவச பயிற்சி பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

https://smgacw.org/vision-mission/

https://www.queenmaryscollege.edu.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.queenmaryscollege.edu.in/pdf/UPSC-FREE-COACHING-Application.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Free Coaching 2022 for Women: It has been announced that you can apply for the Integrated Civil Service (IAS, IPS) Free Coaching Courses for Women. Interested and eligible students are advised to apply before November 24. An opportunity to learn... Don't miss it girls...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X