வனவியலில் பட்டம் பெற்றவரா? ரூ.2.05 லட்சத்தில் அரசு வேலை...!

TNPSC உதவி வனப் பாதுகாவலர் பணி 2022

தமிழ்நாடு வனப்பணி (தொகுதி - I ஏ) பணிகளில் உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஜன., 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம் : தமிழ்நாடு வனப் பணி(Tamilnadu Forest Service)

மேலாண்மை : மாநில அரசு

ரூ.2.05 லட்சத்தில் உதவி வனப் பாதுகாவலர் பணி..!

பணி விவரம்

Ø உதவி வனப் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 9

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.1.2023

கல்வி தகுதி

தமிழ்நாடு வனப்பணி பணிகளில் அடங்கிய உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வனவியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல்ஸ, கணிதம், புள்ளியியல், புவியியல், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், வேதியியல் பொறியியலில், கணினி/கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலை பட்டம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 22 இன் படி, ரூ. 56,100 -ரூ. 2,05,700 வரை மாத ஊதியம் பெறுவர்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø அறிவிப்பு நாள்: 13.12.2022

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.1.2023

தேர்வு முறை

முதல்நிலைத் தேர்வு (ஒற்றை தாள் கொள்குறி வகை):

பொது அறிவு பிரிவில் 175 கேள்விகள், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பிரிவில் 200 கேள்விகள் என 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேர தேர்வாக நடைபெறும்.

முதன்மைத் தேர்வு

கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் -I 100 மதிப்பெண், பொது அறிவு தாள்-II 200 மதிப்பெண்கள், தாள்-III பொது ஆங்கிலம் 100 மதிப்பெண்கள், தாள்-VI விருப்பப்பாடம்-1, 300 மதிப்பெண்கள், தாள்-V விருப்பப்பாடம்-2, 300 மதிப்பெண், நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள் - 120 மதிப்பெண்கள் என மொத்தம் 1020 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும

வயது வரம்பு

தமிழ்நாடு வனப்பணி பணிகளில் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு அதிகபட்ச 39 வயதை பூர்த்தி செய்திருக்கக்கூடாது. ஏனையோர் 1.07.2022 அன்று 34 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது. குறைந்தபட்ச வயது 21 ஆகும்.

தேர்வு கட்டணம்

Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-

Ø முதனிலை தேர்வுக் கட்டணம் : ரூ 100/-

Ø முதன்மை எழுத்து தேர்வுக் கட்டணம் : ரூ 200/-

மற்ற பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை உண்டு. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மறக்காதீங்க...!

Ø இணையவழி விண்ணப்பத்தை 12.1.2023 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Ø எனவே, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் இருந்தால் விண்ணப்பிக்கும் போதே பதவிவேற்றம் செய்ய வேண்டும்.

முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்க நடத்தப்படும்

முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்

சென்னை, மதுரை , கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.

முதன்மை எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும்.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

www.tnpscexams.in

https://www.tnpsc.gov.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/36_2022_ACF_ENG.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/36_2022_ACF_TAM.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Public Service Commission, also known as TNPSC, has released notification for the post of Assistant Forest Conservator in Tamil Nadu Forest Service (Volume - IA) posts. Eligible candidates can apply for this post only through online mode till 12th Jan.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X