தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை...!

தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிசியோதெரப்பிஸ்ட், ஸ்பெஷல் எஜுகேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி (Thoothukudi Medical College) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாகும். தென் தமிழகத்தில் தூத்துக்குடி நகரில் உள்ள இக்கல்லூரி டி.கே.எம்.சி அல்லது அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் இக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகம் மற்றும் உலகசுகாதார நிறுவனத்தின் அங்கீகாரங்களை பெற்றுள்ளது.

தமிழக அரசு 16.08.2000-ம் ஆண்டில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியை நிறுவியது. இக்கல்லூரியானது முதலில் கடற்கரை சாலையிலுள்ள மீன்பிடி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய (மீன்வளக் கல்லூரி) வளாகத்திலிருந்து செயல்பட்டது. பின்னர் 2001-ஆம் ஆண்டில் தூத்துக்குடி நகரத்திற்கு மாற்றப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை...!

ஜூலை 2001 முதல் மருத்துவப் பட்டப் படிப்புக்கு ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கை என்ற எண்ணிக்கையுடன் கல்லூரி செயற்படத் தொடங்கியது. புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் மருந்தியல், நோயியல், நுண்ணுயிரியல், சமூகம் மற்றும் பாதுகாப்பு மருத்துவம் போன்ற துறைகள் செயல்படத் தொடங்கின. மாவட்ட தலைமை மருத்துவமனை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியது.

இந்த பெருமைமிகு மருத்துவக் கல்லூரியில்தான் தற்போது பிசியோதெரப்பிஸ்ட், ஸ்பெஷல் எஜுகேட்டர் (Physiotherapist, Special Educator) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. தலா ஒரு பணியிடம் விதம் மொத்தமாக 2 பணியிடங்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ளன.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Bachelor's Degree, B.Ed, Diploma, PG Diploma தேர்ச்சி பெற்றவராக இருத்தல் அவசியம்.
அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை https://drive.google.com/file/d/1ucVQMjUP9cclNR4LdTKYC3ijv0V9kWfI/view?pli=1 என்ற இணையதள லிங்க்கில் தொடர்புகொண்டு அறியலாம்.

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.13,000/- முதல் ரூ.17,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் எனத் தெரியவந்துள்ளது.

நேர்காணல் மூலம் இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் (05.12.2023 ) வந்து சேருமாறு தபால் அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ucVQMjUP9cclNR4LdTKYC3ijv0V9kWfI/view?
pli=1
என்ற இணையதள லிங்க்கை தொடர்பு கொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Thoothukudi Govt Medical College invites Offline Application For Recruitment of Physiotherapist, Special Educator Posts. Offline Application Will Be Available in the Official Website thoothukudi.nic.in/ from 28.11.2023 to 05.12.2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+